பாரிஸ் ஒலிம்பிக் : களமிறங்கிய இந்திய வீரர்கள் !

பாரிஸ் ஒலிம்பிக் : களமிறங்கிய இந்திய வீரர்கள் !
X

பாரிஸ் ஒலிம்பிக் 

32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றன. இப்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடக்கவிருக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படுகிறது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, அதே நாட்டிலேயே பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படுகிறது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, அதே நாட்டிலேயே பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறும்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாரிஸில் நடத்தப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மாலை நடைபெறுகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தொடக்க விழாவை ஒரு மைதானத்தில் நடத்தாமல், பாரிஸின் புகழ்பெற்ற சீன் நதிக் கரையில் நடத்துகிறார்கள்.

இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Tags

Next Story