இந்த விரதத்தை பெற்றோரை இழந்தவர்கள் மேற்கொண்டால் சொர்க்கம் !!

இந்த விரதத்தை பெற்றோரை இழந்தவர்கள் மேற்கொண்டால் சொர்க்கம் !!
X

ஏகாதசி விரத பலன்

வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.

பெற்றோரை இழந்தவர்கள் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை பெற்றோருக்கும் மூதாதையர்களுக்கும் அர்ப்பணித்தால் அவர்கள் கற்கதி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

Tags

Next Story