திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் காண வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் !!

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் காண வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் !!
X

Karthikai Mahadeepam

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு பிரசித்தி பெற்றது. புனித நகரமான திருவண்ணாமலையில் கொண்டாடப்படும், கார்த்திகை தீபத் திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீப ஒளியைக் காண ஏராளமான பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தீப நிகழ்வை பார்க்க வரும் பக்தர்கள் அங்கே தங்கி, வழிபாடு நடத்தவும் பலரும் திருவண்ணாமலை நகர் பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்கள் அறைகளை இப்போதே முன்பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இதனால், பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. கூட்ட நெரிசல், பாதுகாப்பு காரணங்களுக்காக மகா தீபத்தின்போது கோவிலுக்குள் பக்தர்கள் முன்பதிவின் அடிப்படையில் பார்க்க முடியும்.

இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படும். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்பட உள்ளது. ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

தீபத்தை பார்க்க அதிகாலை 2.30 மணிக்கும், மகா தீபத்தை காண வருபவர்கள் பகல் 3.30 மணிக்கும் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் வருகிற 10 அல்லது 11- ந்தேதி விநியோகிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுடன், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5,200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8 ஆயிரம் பேர் மகா தீபத்தை காணவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய உடற்தகுதி அடிப்படையில் 2 ஆயிரம் பேர் மலையேற அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

Tags

Next Story