வைகாசி மாத சிறப்பு விசேஷங்கள்.! | KING NEWS 24X7

வைகாசி மாத சிறப்பு விசேஷங்கள்.! | KING NEWS 24X7
X

*ஸ்ரீராமஜயம்* *வைகாசி மாதம் 2025 - விசேஷங்கள்*🍁

15 Thu விஷ்ணுபதி புண்யகாலம் , ரிஷப சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு

16 Fri சங்கடஹர சதுர்த்தி விரதம்

19 Mon திருவோண விரதம்

23 Fri ஏகாதசி விரதம்

24 Sat பிரதோஷம்

25 Sun மாத சிவராத்திரி

26 Mon கார்த்திகை விரதம் , சாவித்ரி விரதம்

27 Tue அமாவாசை

28 Wed முதுவேனில்காலம் , சந்திர தரிசனம் , அக்னி நட்சத்திரம் முடிவு

30 Fri சதுர்த்தி விரதம்

01 Sun சஷ்டி விரதம்

02 Mon சோமவார விரதம்

03 Tue ரிசப விரதம்

06 Fri ஏகாதசி விரதம்

08 Sun பிரதோஷம்

09 Mon வைகாசி விசாகம்

10 Tue பௌர்ணமி விரதம் , சாவித்ரி விரதம்

11 Wed பௌர்ணமி

14 Sat சங்கடஹர சதுர்த்தி விரதம்

*வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதம் ஆகும். சூரியன் இடப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். வளம் தரும் மாதமாக வைகாசி மாதம் காணப்படுகின்றது.*🌹

பொதுவாக மாதங்கள் அத்தனையும் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டமைந்துள்ளன. அதிலும் வைகாசி மாதம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

வைகாசி மாத சிறப்புகள்

1. வசந்த வைகாசி.

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது.

2. குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.

சித்திரை முடிந்து வைகாசி மாதம் ஆரம்பிக்கும் பொழுது வணங்க வேண்டிய தெய்வமாக குலதெய்வம் உள்ளது. குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

3. வைகாசி மாதத்தின் சிறப்பு பெயர்கள்.

இம் மாதத்திற்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன. இம்மாதமானது மாதவ மாதம், வைகாசம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

4. வைகாசி மாதத்தில் பிறந்த கடவுள்கள்.

முருகப்பெருமான், நரனும் சிங்கமும் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் மற்றும், இந்துக்களின் மரணக் கடவுளான எமதர்மன் ஆகியோர் வைகாசி மாதத்தில் தான் தோன்றியுள்ளனர்.

5. நாயன்மார்களின் பிறப்பு.

வைகாசி மாதத்தில் 63 நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், கழற்சிங்கர், சோமாசி மாறன், நமிநந்தி அடிகள், திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர் ஆகியோர் பிறந்துள்ளனர்.

6. தெய்வீகத் திருமணங்கள்.

சிவபெருமான் பார்வதி திருமணமும், முருகப்பெருமான் தெய்வானை திருமணமும் நடைபெற்ற மாதம் வைகாசி ஆகும். இந்தத் தினம் புண்ணிய தினமாகும்.

7. புராண நிகழ்வுகள்.

சிவபெருமான் உலகைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டது வைகாசி வளர்பிறை துவாதசியில தான், வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.

ரிஷப விரதத்தைப் பின்பற்றி இந்திரன் ஜராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது.

8. வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்.

“ரிஷப விரதம்” என்பது வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.

9. வழிபாட்டு பயன்கள்.

இம்மாதத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள ஆயுள், செல்வம், புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும்.

வைகாசியில் வைகுந்தனை நினைத்தாலும் சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.

வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நிராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

10. வைகாசி மாதம் இந்துக்களுக்கு மட்டுமின்றி, பௌத்தர்களுக்கும் சிறப்புக்குரிய மாதமாகும்.

புத்தர் ஞானம் பெற்றததும், மோட்சம் அடைந்ததும் வைகாசி பௌர்ணமியில் என்பதால் வைகாசி பௌர்ணமியை பௌத்தர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.🌹

Next Story