கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பதற்கான ரகசியம் தெரியுமா ??

கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பதற்கான ரகசியம் தெரியுமா ??
X

ஆன்மிக தகவல்

தமிழ் மாதங்களில் 9 வது மாதமாக வரும் மார்கழி பெரும் சிறப்புமிக்க மாதமாக உள்ளது. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகலாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும். அந்த வகையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் மார்கழி. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்த நேரத்தில் மானுடர்கள் இறைவனை வழிபட வேண்டியது அவசியமானதாகும்.

மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிடுவது இல்லத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த நேரத்தில் ஓசோனில் வெளிப்படும் காற்றை சுவாசிக்க அந்த ஆண்டு முழுவதற்குமான ஆரோக்கியத்தை நம் பெறலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிட்டுமாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூவை வைத்து வழிபாடு செய்வர்.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைக்கப்படுவது வழக்கம். அந்த காலகட்டத்தில் திருமண புரோக்கர், மேட்ரிமோனியல் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. பிள்ளைக்கு பெண் தேடுவோர் எந்த வீட்டு வாசலில் பூசணிப்பூ இருக்கிறதோ அந்த வீட்டில் பெண் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்பது அர்த்தம். இதனை குறித்து கொண்டு தைமாதம் திருமணத்திற்கு பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவர். பெண் தேடுபவர்களுக்கு எங்கள் வீட்டிலும் திருமணத்திற்கு தயாராக பெண் உள்ளார் என்பதை அறிவிக்கவே வீட்டு வாசலில் பூசணிப்பூ வைப்பார்கள்.

Tags

Next Story