பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு GST நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு !!

பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு GST நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு !!
X

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர்ந்த நிலையில் இருந்தே எல்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களைப் பாதித்துள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. நோட்டீஷை பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அனுப்பட்ட ஜி.எஸ்.டி. நோட்டீசில் கோவில் வருமானத்துக்காக 1.57 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

கோயில் சொத்துக்களின் வாடகை, சிற்பங்கள், இதர பொருள்களின் விற்பனை, கோயில் யானைகளை வாடகைக்கு விடுவது போன்ற வருவாய்க்கு 1.57 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் 100% அபராதம், 18% வட்டி செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறையான கணக்குகள் படி 16 லட்சம் ரூபாய்தான் செலுத்த வேண்டும். அதில் 3 லட்சம் ரூபாய் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் வருமானத்திற்கு கூட ஜி.எஸ்.டி. கட்டவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story