தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!

TRB
தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணி இடங்களுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண்.02 / 2025. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் Website: https://www.trb.tn.gov.in வாயிலாக இன்று ( 10.07.2025 ) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் ஆகஸ்ட் 12 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . எனவே, விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.