எல்பிஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்!!

எல்பிஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்!!
X

Gas lorry Strike

எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு 2025-30 ஆண்டுக்கான புதிய டெண்டர் அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. இதில் 3,500 டேங்கர் லாரிகள் வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு 2025-30 ஆண்டுக்கான புதிய டெண்டர் அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. இதில் 3,500 டேங்கர் லாரிகள் வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைகளால், பாரபட்சமாக லாரிகளுக்கு டெண்டர் விடுவதாகவும், இதனால் ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலை கிடைக்காத சூழல் உள்ளதாக கூறி, தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் எல்பிஜி டேங்கர் லாரிகள், சமையல் எரிவாயு பிளாண்டுகளுக்கு செல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவர்கள் என கூறப்பட்ட நிலையில் சற்று முன் எல்பிஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை 2026ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததன் காரணமாக போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

Next Story