வாரத்தின் முதல் நாள் குட் நியூஸ் சொன்ன தங்கம்!!

Gold
தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சுமார் 98 ஆயிரம் ரூபாயை நெருங்கியது . அவ்வளவுதான் இனி தங்கத்தை நாம் வாங்க முடியாது தங்க நகைகளை நாம் கனவில் தான் நினைத்துப் பார்க்க முடியும் என சாமானிய மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையிலிருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையை பொருத்தவரை தங்கம் விலை என்பது கடந்த அக்டோபர் 1இல் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10950 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி 12,200 ரூபாய் என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இறுதியாக நேற்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,500 என்ற விலையில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இன்று (அக்.27) சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.170க்கு விற்பனையாகிறது.
