வானிலை அப்டேட்! நாளை தீவிரப்புயலாக மோந்தா கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா

X
amutha
சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, “சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளது. மோந்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாளை மாலை முதல் இரவுக்குள் தீவிரப்புயலாக மோந்தா கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும். இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் இல்லை. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Next Story
