தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோந்தா!!

தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோந்தா!!
X
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. தற்போது, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 420 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 570 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, இன்று காலை தீவிர புயலாக வலுவ டைந்து, மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90 -100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். தற்போது நிலவரப்படி, தீவிர புயலாக, மோந்தா புயல் வலுவடைந்தது. இன்று இரவு தீவிர புயலாக காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ள நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Next Story