காலையில் குறைந்து மாலையில் ஏறிய தங்கம் விலை!!

தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்தது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் காலையில் சவரனுக்கு ₹1,800 குறைந்திருந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் ₹1,600 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது, இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
