வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் திறப்பு - கே.என்.நேரு பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். அதன் ஒரு பகுதியாக, வடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு, வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 7.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணைந்து இன்று திறந்துவைத்தார்.
அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் அப்போது அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குனர் ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச் செல்வன் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
