பிளஸ் 1 மாணவர்களுக்கு குட்நியூஸ்... பொதுத்தேர்வு ரத்து!!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக கல்வி வாரிய கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு முதலே தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை செயல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது, அரசு எடுத்த இந்த முடிவுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை கல்வி வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது குறிப்பிடதக்கது.