மோந்தா புயல்- 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு!!

மோந்தா புயல் காரணமாக தென் மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் மோந்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் 150 க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 ரயில்கள் மறு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறு ரயில்கள் வழித்தடம் மாற்றி அனுப்பப்பட்டு வருகிறது. முக்கிய ரயில் நிலையங்களான விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, காக்கிநாடா உள்ளிட்ட இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முழு பணமும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ஐஆர்சிடிசி அல்லது ரயில் ஒன் செயலில் மூலமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முழு பணமும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். புயல் மழையால் நடுவழியில் ரயில்கள் நின்றால் தேவையான உணவு, குடிநீர் காலதாமதம் இல்லாமல் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
