சற்று ஆறுதல் தந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு ரூ.160 குறைந்தது!!

சற்று ஆறுதல் தந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு ரூ.160 குறைந்தது!!
X

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.இனி தங்கம் வாங்குவது கனவுல தான் என புலம்பி வருகின்றனர். இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டியுள்ளது. தங்கம், வெள்ளி விலை மாறி மாறி புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை இன்று கொஞ்சம் குறைந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760க்கு விற்பனையானது. கிராம் 10 ஆயிரத்து 220 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் நேற்று (செப்.12) ஒரு சவரன் ரூ.81,920-க்கும், ஒரு கிராம் ரூ.10,240-க்கும் விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 13) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.143க்கும், ஒரு கிலோ ரூ.1,43,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story