சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக மாற்றமின்றி விற்பனை!!

gold
அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ரூ.10,150-க்கும், 1 சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.