காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம்...!! ஒரே நாளில் கிட்டத்தட்ட 2000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை!!

காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம்...!! ஒரே நாளில் கிட்டத்தட்ட 2000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை!!
X

gold

தங்கம் விலை ஒரே நாளில் கிட்டத்தட்ட 2000 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,825-க்கும், சவரனுக்கு ரூ.1960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94600-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.9-ம், கிலோவுக்கு ரூ.9 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 06 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்படுகிறது.

Next Story