தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!!
X

Dog

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்துக் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும பொது சுகாதாரத்துறைக் கூறியுள்ளது.

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்துக் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும பொது சுகாதாரத்துறைக் கூறியுள்ளது. ரேபிஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ரேபிஸ் தொற்றில் இருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்குத் தடுப்பூசி தீர்வாக உள்ளது எனச் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ளது. நாய் கடி தடுப்பதற்கும் நாய் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கும் பொது சுகாதாரத் துறைத் தரப்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story