தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240-ம் உயர்வு!!

தங்கம் விலை இன்று  சவரனுக்கு ரூ.240-ம் உயர்வு!!
X

Gold

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, நேற்று விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டு வந்த வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றிஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story