சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!!

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!!
X

gold

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,065 ரூபாய்க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story