நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம்: தேர்தல் ஆணையம்

voter list
பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கோவா, சட்டீஷ்கர், அந்தமான் நிக்கோபர், மத்தியபிரதேசம், லக்ஸ்தீப், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எனப்படும் SIR மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள ை திருத்தி, உண்மையான வாக்காளர்களை சேர்க்க இந்த செயல்முறை உதவும் என்றும் அவர் கூறினார்.
