ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன கிளை… புதிய பொலிவுடன் பொள்ளாச்சியில் துவக்கம்!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன கிளை…  புதிய பொலிவுடன் பொள்ளாச்சியில் துவக்கம்!!
X

REPCO Pollachi

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தங்களது பொள்ளாட்சி கிளையை புதிய பொலிவுடன் இன்று தொடங்கப்பட்டது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தங்களது பொள்ளாட்சி கிளையை புதிய பொலிவுடன் இன்று தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் மண்டல மேம்பாட்டு மேலாளர் கே.சி.ஷிஜு முன்னிலையில் நடைபெற உள்ள இந்த புதிய கிளை திறக்கும் நிகழ்ச்சியில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் ரெப்கோ வங்கி இயக்குநர் சி.தங்கராஜு கலந்துக்கொண்டு புதிய கிளையை தொடங்கி வைத்தார்.


மேலும் இதில் உதவி பொது மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.சிபி, தலைமை மேலாளர் மற்றும் கிளைத் தலைவர் எஸ்.அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் வாடிக்கையாளருக்கு கடன் அனுமதி உத்தரவு மற்றும் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.


முன்னதாக கடந்த கடந்த ஆக.23 ஆம் தேதி சென்னையில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில், ரெப்கோ வங்கியின் தலைவர், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் இயக்குநர் சந்தானம் கலந்துக்கொண்டு பேசுகையில், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 2000லிருந்து 2002 ஆம் ஆண்டு வரை தனி அலுவலகம் இல்லாமல் வங்கி ஓரத்தில் ஒரே மேஜையுடன் தொடங்கி கடின உழைப்பில் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது 150 கோடி அலுவலகம் வாங்க தயாராகி விட்டனர். இந்நிறுவனம் தற்போது 15 ஆயிரம் கோடியை எட்டும் அளவிற்கு வந்துவிட்டது. தற்போது 7 ஆயிரம் கோடியை விரட்டி செல்கிறோம் என்றார்.


அவரை தொடர்ந்து பேசிய ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைவர் ரெப்கோ வங்கி இயக்குநர் சி. தங்கராஜு, ஒரு வீட்டு வசதி நிறுவனத்தை உருவாக்கி மக்களுக்கு வீட்டு கடனை குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ். ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ரெப்கோ வங்கியில் வீட்டு லோன் வட்டி 18%, 19% 20%. எனவே வீட்டு கடனை 12%, 13% -ல் கொடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கிலே முன்னாள் எம் டி பாலசுப்ரமணியம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் விளைவாக இன்று 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் நம் நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்று சொந்த வீட்டில் இருக்கிறார்கள். இன்று நாம் சில கோடிகளில் ஆரம்பித்த வர்த்தகம் 10 கோடி முதலில் டிரான்ஸ்பர் பண்ணாங்கன்னு சொன்னாங்க. இன்னைக்கு 15,000 கோடி வர்த்தகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் இந்த ஆண்டிலே. நிச்சயமாக இந்த ஆண்டு அந்த 15 ஆயிரம் கோடியை தாண்டி விடுவோம் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் இதில் ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை பொது மேலாளர் மற்றும் இயக்குனர் நாகூர் அலி ஜின்னா உள்ளிட்ட பலர் உரையாற்றினார். முன்னதாக நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story