கரூர் கூட்ட நெரிசல்; 5 மணி நேரமாக சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல்; 5 மணி நேரமாக சிபிஐ விசாரணை
X
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரமாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டனர். இதைத் தொடர்ந்து இன்று விசாரணைக்காக வரவழைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள் மற்றும் போட்டோகிராபர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூரில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், கரூர் மாநகர காவல் நிலையத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது 109, 110, 125, 223 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இம்மாதம் 17ஆம் தேதி சிபிஐ எஸ் பி பிரவீன் குமார் தலைமையில் மூன்று பேர்கள் முதல் கட்டமாக வந்தனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்காக இருவர் வந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மதுரையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் ஆறு பேர் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், 15 நாட்களுக்குப் பிறகு சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. விசாரணையின் முதல் நபராக, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனை வரவழைத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சம்பவம் நடந்த இடத்தில் என்ன மாதிரி விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் யார்? அவருக்கு யார் தகவல் அளித்தனர். என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்திற்கு சென்ற அதிகாரிகள், அதி தொழில் நுட்ப கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டு இடத்தை படம் பிடித்தனர். அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்காக அழைக்கப்பட்ட பொதுமக்களிடம் 5 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

Next Story