வேகமெடுக்கும் மோந்தா புயல்: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

வேகமெடுக்கும் மோந்தா புயல்: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!
X
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் மோந்தா புயல் உருவானது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிரப் புயலாக இன்று இரவு கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, அப்பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் அதிவேகமான சுழல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும். இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (அக் 28) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த சூறாவளிக்காற்று வீசலாம். எனவே, மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story