சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!!
X

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கும் நேற்று சவரனுக்கு 55 ரூபாய் குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story