சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!!
X

gold

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையிலும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஒரு சவரன் சுமார் ரூ.50,000 என்று விற்பனையான நிலையில் , நடப்பாண்டு ரூ.74ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை கனிசமாக உயர்ந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும், அவ்வப்போது குறைந்தும் வருகிறது. நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240க்கும், கிராமுக்கு ரூ.15 உயந்து ஒரு கிராம் ரூ.9,155க்கும் விற்பனை செய்யப்படது. அதேபோல் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி ஒரு கிராம் ரூ.127க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ80 குறைந்து 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.73,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story