நகை வாங்குவோருக்கு இடி மேல் இடி..! சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!!

gold
தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது. தங்கம் விலை 2025ம் ஆண்டில் மட்டும் இது 36 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச நிபுணர்களின் கூற்றுப்படி, இதே வேகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ரூ.1,25,000ஐ எட்ட வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். இந்த சூழலில் கடந்த 2 தினங்களாக எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.142க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.