போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து! - வைரலாகும் நடிகர் பார்த்திபனின் பதிவு!!

parthipan
பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அந்த பதிவில், ''நண்பர்களே.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று கூறியுள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்ட பதிவில், பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி’ என பதிவிட்டுள்ளார்.