4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!!

ravi
X

ravi

4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். கவர்னர் 4 நாள் பயணமாக, டெல்லி சென்று உள்ளதால், வருகின்ற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார். கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவர் வழக்கமாக டெல்லி செல்லும் பயணம்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், 4 நாட்கள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ள கவர்னர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னரின் 4 நாட்கள் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story