ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தருமபுரம் ஆதீனத்தை அலறவிட்ட பாஜக..!

ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தருமபுரம் ஆதீனத்தை அலறவிட்ட பாஜக..!

தருமபுரம் ஆதீனத்தை மிட்டியதாக புகார்

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச படம் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற பாஜக நிர்வாகிகள் கும்பல்.

ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜக மாவட்ட தலைவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டியதன் பின்னணியில் யாரெல்லாம் இருந்துள்ளனர் என்பதை கூறுகிறது இந்த வீடியோ.

அண்மையில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார். மக்கள் மத்தியிலும், ஆன்மீகவாதிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் தனக்கென தனி மரியாதையை பெற்றிருப்பவர் தருமபுரம் ஆதீனம்.

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமையானது தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27வது சன்னிதானமாக தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கும் தனி பங்கு இருந்தது.

இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் தருமபுரம் ஆதீனத்தை பாஜகவினர் மிரட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். காரணம் ஆன்மீக அரசியலை நடத்தி வரும் பாஜகவினர் ஆதீனங்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் மீது மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இந்த சூழலில் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட சம்பவத்தில் பாஜகவினர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினருக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டுவதாகவும், பணம் பறிக்க முயற்சிப்பதாக பரவலாக பேச்சுகள் அடிப்பட்டன. இப்படி தொடர்ந்து மிரட்டல் வந்ததால் தருமபுரம் ஆதீனம், தனது சகோதரர் விருத்தகிரியை அழைத்து மிரட்டல் விடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து தான் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக விருத்தகிரி புகார் அளித்துள்ளார். அதில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளார் செந்தில் என்பவரும் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் இருப்பதாகவும், பணம் தரவில்லை என்றால் அதை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவோம் என்றும் மிட்டுவதாக கூறியுள்ளார். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் மீனா பாஜக நிர்வாகி உட்பட 9 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலர் விநோத், மயிலாடுதுறை பாஜக மாவட்ட செயலர் விக்னேஷ், ஆடுதுறையை சேர்ந்த வினோத், செம்பனார்கோயிலை சேர்ந்த பிரபலகல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாஜகவின் முன்னாள் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

இந்த நான்கு பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் ஆதீனத்தை மிரட்ட மூளையாக செயல்பட்டது மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி சென்ற போது அகோரம் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம் ஆதீனத்தை மிரட்ட உடந்தையாக இருந்தது ஆதீனத்தின் மெய்காப்பாளர் செந்தில் குமார், ஆதீனத்தின் வீடியோ கிராஃபர் பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் விஜயகுமார், அகோரம் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவரான அகோரம் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவுக்கு வருவதற்கு முன்னதாக பாமகவில் இருந்த அகோரம் 10 ஆண்டுகளுக்கு முன்பு, பாமக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் கைதாகினார். இதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினை தரைகுறைவாக பேசியதுடன், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசிய வழக்கிலும் அகோரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இப்படி குற்றப்பின்னணியை கொண்ட ஒருவர் பாஜகவின் மாவட்ட தலைவராக இருப்பதுடன், ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றது அக்கட்சியினரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story