பிரதமர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கிறார். இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடுதலாக தென் மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story