கோவையில் சர்வதேச ஹாக்கி மைதான பணி ஏப்ரலில் முடியும்: செந்தில் பாலாஜி

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதான பணி ஏப்ரலில் முடியும்: செந்தில் பாலாஜி
X

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவையில் ரூ.9.67 கோடியில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் ரூ.9.67 கோடியில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவை மாநகராட்சி 72வது வார்டுக்கு உட்பட்ட ஆர்எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில், மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் செயற்கை புல்வெளியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த, சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. இந்த இடத்தை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் அருகில் உள்ள மாநகராட்சி மாதிரி பள்ளி விடுதி கட்டிடத்தையும் அவர், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்று, கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் ரூ.9.67 கோடியில் செயற்கை புல்வெளியுடன் கூடிய சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இப்பணி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும். கோவை மாநகர பகுதியில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. புதிய பணிகள் மேற்கொள்ளவும் ஆய்வு நடக்கிறது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட தார்ச்சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவித்தபடி, கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் கட்டுமான பணி விரைவில் துவங்கும். இப்பணியும், போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Tags

Next Story