ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியீடு

ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியீடு

கோப்பு படம் 

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியானது.

17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் வரும் மார்ச் 22 இல் தொடங்கி, மே 26 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பை அடுத்து, மீதம் இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து இன்று மாலை ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற்றும் எனவும் முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story