கொடைக்கானலில் இ - பாஸ் நடைமுறைக்கு வந்தாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை - திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு !!!

கொடைக்கானலில் இ - பாஸ் நடைமுறைக்கு வந்தாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை - திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு !!!
X

கொடைக்கானல் 

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான இ -பாஸ் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதாக திண்டுக்கல் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மழைப்பகுதியில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படை எடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மற்றும் நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு இ - பாஸ் நடைமுறை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு விட்டது. இதனை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இ -பாஸ் காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய தங்கும் விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் நீதிபதி அளித்துள்ள இந்த இ -பாஸ் மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இ -பாஸ் நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை எனவும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் மூலம் சுற்றுலா வருவதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story