தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்!!
X

R.N.Ravi

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று மாலை 5.30 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். 5ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார். திடீர் பயணமாக டெல்லி செல்லும் அவர், ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வழக்கு சம்பந்தமாக, சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் தனது உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்தும் ஒன்றிய அரசிடம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, கவர்னரின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே நிறைவடைந்து விட்டது. அதற்கு பிறகு அவரது பதவி காலம் இதுவரை நீடிக்கப்படவில்லை. எனவே அதுகுறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது பயணம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story