TET தேர்வுக்கு தடையில்லாச் சான்று பெற தேவையில்லை!!

TET தேர்வுக்கு தடையில்லாச் சான்று பெற தேவையில்லை!!
X

TET

டெட் தேர்வு எழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு எழுதுவதற்கு, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தாள் ஒன்றுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 15 ஆம் தேதியும், தாள் இரண்டுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 16 ஆம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத 4.80 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாக கடந்த முறையை விட 17% பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வை எழுத 4.80 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாக கடந்த முறையை விட 17% பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, அரசுப் பணியில் இருப்பவர்கள் உயர்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க துறைசார்ந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இதனால், டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலர் தேர்வு எழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், டெட் தேர்வு எழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story