அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் : நுரையீரல் அறுவை சிகிச்சையில் வரலாறு படைக்கும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்!!

அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் : நுரையீரல் அறுவை சிகிச்சையில் வரலாறு படைக்கும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்!!
X

Thangam cancer center

நுரையீரல் அறுவை சிகிச்சையில் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் வரலாறு படைத்து வருகிறது.

மக்கல்லில் அமைந்துள்ள தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோய் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, நுரையீரல் அறுவை சிகிச்சையிலும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றி விகிதத்தில், உலகத்திலேயே சிறப்பான இடத்தை இந்த சிகிச்சை மையம் பெற்றுள்ளது.


தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் தமது மருத்துவ சேவையை தமிழகம் மட்டுமின்றி, அடுத்தக்கட்டமாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரிலும் அளித்து வருகிறது. இம்மையத்தில் புற்றுநோய் சிகிச்சைகளை தவிர்த்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நுரையீரல் அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. இங்கு அதிநவீன மருத்துவ தொழில்நுட்பமான டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.



நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவலையின்றி சுவாசிக்க இங்கு அளிக்கப்படும் டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை 100 சதவீதம் பலனளிப்பதாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இங்கு உலகிலேயே தலைச்சிறந்த மருத்துவ வல்லுநர்களை கொண்டு மேற்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.



இதனிடையே புகைப்பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலனடையும் விதமாக , ஒவ்வொரு ஆண்டும் லோ டோஸ் சிடி ஸ்கேன் முறையில் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து, அவர்களது குடும்பத்தாரின் நலனையும் பாதுகாப்பதில் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.



5000 ரூபாய் மதிப்புள்ள இந்த லோ டோஸ் சிடி ஸ்கேன் பரிசோதனை நவம்பர் மாதம் முழுவதும் 2500 ரூபாய்க்கு மட்டுமே செய்யப்படுகிறது என்று இம்மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்பழக்கம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Website :https://thangamcancercenter.com

Youtube :https://www.youtube.com/@tccheals


Tags

Next Story