தங்கம் விலை மேலும் ரூ.640 அதிகரிப்பு!!

தங்கம் விலை மேலும் ரூ.640 அதிகரிப்பு!!
X

gold

சென்னையில் ஆபரண தங்கம் சவரன் 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கம் விலை இன்று மேலும் ரூ.640 அதிகரித்து பவுன் ரூ64 ஆயிரத்தை அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் மூலம் தினம்தினம் புதிய உச்சத்தை தங்கம் விலை பதிவு செய்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.62,320 ஆக இருந்தது. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. எனவே அன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. 3ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.61,640 ஆகவும், 4ம் தேதி ரூ.62,480, 5ம் தேதி ரூ.63,240, 6ம் தேதி ரூ.63,440 ஆகவும் இருந்தது. 7ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி பவுன் ரூ.63,440க்கு விற்பனையானது. 8ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,560க்கு விற்பனையானது. இது, தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை தொட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்ததை பார்க்க முடிந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,980க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,840க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,000ஐ தாண்டியது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,480க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது. தங்கத்தின் தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story