செல்போன்களில் கூகுள் அசிஸ்டன்டிற்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தி 9 இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதிகள் !!

செல்போன்களில் கூகுள் அசிஸ்டன்டிற்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தி 9 இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதிகள் !!
X

ஜெமினி

உலகின் முன்னணி இணைய தேடுதளமான கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான ‘ஜெமினி’ தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்தலாம். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன்களில் கூகுள் அசிஸ்டன்டிற்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, 1,500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரம் பெற முடியும். இதுகுறித்து, X தளத்தில் அறிவித்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ‘உற்சாகமான செய்தி ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த உள்ளூர் மொழிகளை ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் பிற புதிய அம்சங்களையும் சேர்த்து, ஆங்கிலத்தில் Google Messages-ல் Gemini-ஐ அறிமுகப்படுத்துகிறோம்’என்று தெரிவித்திருந்தார்.

Tags

Next Story