கூகுளில் மோசடி - யூசர்கள் கூடுதல் கவனம் !!

கூகுளில் மோசடி - யூசர்கள் கூடுதல் கவனம் !!
X

tech

ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் புதுப்புது கருவிகளை கூகுள் அவ்வப்போது வெளியிடுகிறது. யூசர்கள் தங்களை ஆன்லைன் மோசடிக்காரர்கள் மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஒரு சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டது.

முதலாவதாக பிரபலமான நபர்களின் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களுக்கு யூசர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூகுள் பரிந்துரை செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு மற்றும் கேட்பதற்கு அவை உண்மையானவை போல இருந்தாலும் அது போலியான மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உள்ள கண்டன்ட்டில் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை யூசர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இரண்டாவதாக அதிக அளவு ரிட்டன் தருவதாக சொல்லி கிரிப்டோவில் முதலீடு செய்யும்படி வரும் இமெயில் அல்லது மெசேஜை ஒருவர் நம்பி விடக்கூடாது. இது முதலீடு சம்பந்தப்பட்ட மோசடியாக இருப்பதற்கான வாய்ப்பு ஏராளம்.

அடுத்தபடியாக மோசடிக்காரர்கள் பெரும்பாலும் வங்கி அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்டுகளை பயன்படுத்தி தனிநபர் விவரங்களை திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். உண்மையான வங்கி அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்டுகளை போலவே இருக்கும் போலியான வெப்சைட்டுகளை அவர்கள் உருவாக்குவார்கள். எனவே இந்த மாதிரியான வெப்சைட் மற்றும் போர்ட்டல்களை நாம் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தை தேடும்போது அதற்கு பதிலாக மோசடிக்காரர்கள் வேறு ஒரு விஷயத்தை உங்களுக்கு டிஸ்ப்ளே செய்வார்கள். மேலும் அதில் உங்களுடைய விவரங்கள் அதாவது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை உள்ளிடும் படி கேட்கப்படுவீர்கள். இது உங்களுடைய அக்கவுண்டுகளின் கட்டுப்பாட்டை பெறுவதற்கான ஒரு சதி. இதன் மூலமாக உங்கள் பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு வெப்சைட்டுக்குள் நுழையும் பொழுது அதில் உள்ள URL ஐ கூர்ந்து கவனியுங்கள்.

பொதுவாக பிராண்டுகள் மிகப்பெரிய நிகழ்வுகளுக்காக தனியாக மைக்ரோ வெப் பேஜ்களை உருவாக்குவது வழக்கம். மோசடிக்காரர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. முக்கியமான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கான்செப்ட் போன்றவற்றுக்கான போலி வெப் பேஜ்களை உருவாக்கி அதில் பாஸ், டிக்கெட் போன்றவற்றை விற்பனை செய்து பணத்தை வசூல் செய்கின்றனர்.

Tags

Next Story