UPI லைவ் டிவி ஆதரவுடன் புதிய ஜியோ பாரத் ஜே1 ஃபோன் விற்பனை !!

UPI லைவ் டிவி ஆதரவுடன் புதிய ஜியோ பாரத் ஜே1 ஃபோன் விற்பனை !!
X

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் ஜே1 (JioBharat J1) என்ற 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் 2.8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, போனின் பின்புறத்தில் ஒரு கேமரா உள்ளது, இது 0.3 மெகாபிக்சல் சென்சார் ஆகும்.ஜியோ பாரத் ஜே1 போனின் தனித்துவமான அம்சம், JioMoney மூலம் UPI பேமெண்ட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது. இது யூசர்கள் எளிதாக பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.

ஃபோன் HD அழைப்பு மற்றும் JioCinema போன்ற OTT சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது, இதன் மூலம் யூசர்கள் 455க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. மேலும் இதில் 23 இந்திய மொழிகளை கண்டுகளிக்க முடியும். JioBharat J1 4G ஃபோன் அமேசானில் மட்டும் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. இது கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.8 இன்ச் டச் இல்லாத டிஸ்பிளேவை கொண்டுள்ளது. நீண்ட நேரம் பயன்படுத்த 2,500mAh ரிமூவபிள் பேட்டரி மற்றும் இயர்போன் இணைப்பிற்காக 3.5mm ஆடியோ ஜாக் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, தொலைபேசியில் FM ரேடியோ மற்றும் டார்ச் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ளும் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2,000க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் வலைத்தளங்கள் மூலமாக வாங்கலாம். இந்த ஃபோனின் அதிகாரப்பூர்வ விலை ரூ.1,799 ஆகும். இதில் UPI பேமெண்ட், லைவ் டிவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

Tags

Next Story