6100mAh பேட்டரியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் அறிமுகம் !!

6100mAh பேட்டரியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் அறிமுகம் !!
X

 ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் 6100mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய வகை போனை அறிமுகப்படுத்த இருக்கிறது.

சாம்சங், இன்பினிக்ஸ், மோட்டோரோலா, விவோ பொன்ற நிறுவனங்கள் 6000mAh திறன் கொண்டு பேட்டரியுடன் கூடிய செல்போன்களைதான் வெளியிட்டுள்ளது.

OnePlus Ace 3 Pro பெயருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான OnePlus Ace 2 Pro-வை காட்டிலும் 10 சதம் பெரிய பேட்டரியாகும்.

100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும். இரண்டு 2,970mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பேட்டரிகள் சேர்ந்து 6,100mAh கொண்டதாக இருக்கும்.

Qualcomm Snapdragon 8 Gen 3 processor கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் OnePlus 13R பெயரிடும் வெளியிடலாம் எனத் தெரிகிறது. இது அனைத்தும் தகவலாக வெளிவந்துள்ளது.

Tags

Next Story