ட்ரம்ப் வெற்றி - இந்தியாவில் எலான் மஸ்க் வர்த்தகம் விரைவில் ஆரம்பம் !!

ட்ரம்ப் வெற்றி - இந்தியாவில் எலான் மஸ்க் வர்த்தகம் விரைவில் ஆரம்பம் !!
X

ட்ரம்ப் , எலான் மஸ்க்

எலான் மஸ்க் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் கொண்டுவர பலமுறை முயற்சி செய்துவருகிறார். ஆனால், அவர் தோல்வியே கிடைத்துவருகிறது.

இந்த நிலையில், அவருடைய நெருங்கிய நண்பரான டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், எலான் மஸ்க், இந்தியாவில் தொடங்க இருக்கும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வில்லாமல் வேகம் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது. காரணம், இந்திய பிரதமர் மோடியின் நெருங்கிய நணபராக ட்ரம்ப் உள்ளார்.

இந்தியர்களின் டேட்டா இந்தியாவிற்குள் இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது எனவும் இதனால் இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் ஸ்டார்லிங்ககின் விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

எலான் மஸ்க்கின் ஸ்டாா்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆா்வம்காட்டி வருகிறது. இதனால் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதுதொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) ஜியோ நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ’இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது’ என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு, செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

இது, எலான் மஸ்க்கின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு கூறப்பட்டது. இதனால், எலான் மஸ்க் சந்தோஷத்தில் இருப்பதுடன், அதை தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் வரவேற்றிருந்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பினால், இந்தியாவில் உடனடியாக ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்த முடியும். இவ்விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள TRAI-இன் பரிந்துரைகளை பொறுத்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதில் இறுதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது.

Tags

Next Story