விரைவில் வெளியாகும் ஐகூ Z9s - டீசர் வெளியீடு !!

விரைவில் வெளியாகும் ஐகூ Z9s - டீசர் வெளியீடு !!
X

 ஐகூ Z9s

கடந்த வாரம் Z9 லைட் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஐகூ Z9s வெளியீட்டை ஐகூ உறுதிச் செய்த நிலையில் இது தொடர்பான ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மர்யா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை சீரிஸ் என்று ஐகூ குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, Z9s வரிசையில் Z9s Pro மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் ரிங் எல்இடி பிளாஷ் ஆகியவை கொண்டுள்ளது.

ஐகூ Z9 ப்ரோ சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் Z9 சீரிசில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் 12GB + 256GB மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 0MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.

Tags

Next Story