இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்..? அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

டொனால்டு டிரம்ப்
ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. இந்த நிலையில் 60 நாள் ஹமாஸ் அமைப்பு உடனான போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளேன். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் ஏனெனில் போர் நிலைமையை மேலும் மோசமாக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.