எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்த திட்டம்..!

எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்த திட்டம்..!
X

H-1B Visa

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவுக்கு உயர்த்தி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட வேண்டி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையின் ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப் கூறுகையில், "மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று H1-B குடியேற்றம் அல்லாத விசா திட்டம். இது அமெரிக்கர்கள் வேலை செய்யாத துறைகளில் பணிபுரியும் உயர் திறமையான தொழிலாளர்கள் அமெரிக்காவிற்குள் வர அனுமதிக்கும். இந்த அறிவிப்பு என்னவென்றால், H-1B விண்ணப்பதாரர்களை ஸ்பான்சர் செய்ய நிறுவனங்கள் செலுத்தும் கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தும். இது அவர்கள் அழைத்து வரும் நபர்கள் உண்மையில் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களால் மாற்றப்பட முடியாதவர்கள் என்பதையும் உறுதி செய்யும்.

Next Story