பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு; 10 பேர் உயிரிழப்பு!!

பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு; 10 பேர் உயிரிழப்பு!!
X

sweden school campus gun firing

சுவீடனில் பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது. கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். எனினும் ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story