டிரம்பை சந்தித்த நேதன்யாகு ; இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வருமா ??

டிரம்பை சந்தித்த நேதன்யாகு ; இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வருமா ??
X

டிரம்

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் எரித்து போராட்டம் நடத்தினர்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடினார்கள்.

அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளதாக எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி டிரம்ப் விளக்கம் கொடுத்தார்.

Tags

Next Story