மீண்டும் போலியோ.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் பகிர்!
X
அப்துல் ரஹ்மான், கடந்த 25 ஆண்டுகளில், காஸாவில் போலியோ பாதிப்புக்கு ஆளான முதல் குழந்தை. 11 மாத குழந்தையான ரஹ்மானும், புலம்பெயர்ந்த பெற்றோரும் தற்போது மத்திய காஸாவின் ஒரு முகாமில் உள்ளனர்.
அவர்களது கூடாரத்தைச் சுற்றிலும் குப்பைகளும், கழிவு நீரும் உள்ளது. இதுவே போலியோ நோய் பரவுவதற்கு ஏற்ற சூழல்.
மலம் மூலமாக அல்லது தும்மல், இருமல், நீர் ஆகியவை மூலமாகப் போலியோ பரவுகிறது. பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை போலியோ பாதிக்கிறது. போலியோ பரவல் கண்டறியப்பட்ட பிறகு ஐநா மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் உதவுகிறது.
அடுத்த சில நாட்களில் 10 வயதுக்குட்பட்ட 6.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது ஐ.நா-வின் இலக்காக உள்ளது.
Next Story